ஓடாத படத்துக்கு கோல்டு செயின் கிப்ட்டா.. சூப்பர்ஸ்டார் கொடுத்த பரிசை கலாய்க்கும் நெட்டிசன்கள்
Rajinikanth
Annaatthe
Siva
By Parthiban.A
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்திருந்த அண்ணாத்த படம் கடந்த தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் ஆகி இருந்தது.
போட்டிக்கு வேறு பெரிய படங்கள் இல்லாத நிலையில் மோசமான விமர்சனங்களையும் தாண்டி அண்ணாத்த நல்ல வசூலை பெற்றதாக கூறப்படுகிறது. ஆனாலும் அது பற்றிய ட்ரோல்கள் மற்றும் மீம்கள் இணையத்தில் உலா வந்துகொண்டு தான் இருக்கின்றன.
இந்நிலையில் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினி இயக்குனர் சிவா வீட்டுக்கு நேரில் சென்று ஒரு தங்கச்செயினை பரிசாக கொடுத்திருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
அவர்கள் மீண்டும் ஒரு படத்திற்கு கூட்டணி சேர்கிறார்களோ என நெட்டிசன்கள் இது பற்றி பேசி வருகின்றனர். மேலும் ஓடாத படத்துக்கு எதுக்கு கோல்டு செயின் கிப்ட் எனவும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
Flop aana padathuku Gold Chain ahh ???
— STR Active Fanpage (@DiehardSTRFpg) December 9, 2021