என் மகள் 9 வருடங்களுக்கு பிறகு இதை செய்கிறாள்! ஐஸ்வர்யாவுக்கு ரஜினி கொடுத்த ஆதரவு..
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகந்து வரும் நடிகர் ரஜினிகாந்தின் மகளாக இருப்பவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் தனுஷின் 3 படத்தின் மூலம் இயக்குனர் அவதாரத்தார். இதையடுத்து இரு பிள்ளைகளை பெற்று குடும்பத்தினை பார்த்து கொண்டார்.
விவாகரத்து:-
காதலித்து திருமணம் செய்து கொண்ட ஐஸ்வர்யா 18 வருடத்திற்கு பிறகு நடிகர் தனுஷை பிரிவதாக அறிக்கை மூலம் அறிவித்தார். இச்செய்தி பலரை அதிர்ச்சியடைய செய்தது. எப்படியாவது இருவரையும் சேர்த்து விடவேண்டும் என்று ரஜினி உள்ளிட்ட பலர் போராடி வந்தனர்.
ஒரு கட்டத்தில் அது முடியாத நிலையில் ஐஸ்வர்யா காதல் ஆல்பம் பாடல் ஒன்றினை இயக்க ஆரம்பித்தார். 9 வருடம் கழித்து அப்பாடல் இன்று ரஜினிகாந்தால் வெளியிடப்பட்டது.
ரஜினி ஆறுதல் மெசேஜ்
பயணி என்ற அல்பம் பாடலை சில வாரங்களுக்கு முன்பே வெளியிட இருந்த ஐஸ்வர்யாவிற்கு உடல்நிலையில் பிரச்சனை ஏற்பட்டதால் அது தள்ளிச்சென்று மார்ச் 17 மாலை 4.44 மணிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டது. தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் இப்பாடல் வெளியானது.
தமிழ் பாடலை ஐஸ்வர்யாவின் தந்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். அவர் இதுகுறித்து பகிர்ந்ததாவது, என்னுடைய மகள் ஐஸ்வர்யா 9 வருடங்கள் கழித்து இயக்கும் பயணி என்ற சிங்கிள் பாடலை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். வாழ்த்துக்கள் ஐஸ்வர்யா என்று பதிவு செய்து வீடியோவை வெளியிட்டுள்ளார்.
Happy to release #Payani , music single directed by my daughter Aishwarya , who is back to direction after a long gap of 9 years. I Wish you the very best always @ash_r_dhanush .. god bless .. love you .. https://t.co/x7jUP4upId
— Rajinikanth (@rajinikanth) March 17, 2022