பப்பில் கணவருடன் ஆட்டம்!! ரஜினிகாந்த் மகள் செளந்தர்யாவின் வீடியோ..
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் ரஜினிகாந்த், ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார். இவருக்கு ஐஸ்வர்யா, செளந்தர்யா என இரு மகள்கள் இருக்கும் நிலையில் செளந்தர்யா, இயக்குநராக பல படங்களை இயக்கி இருக்கிரார்.
செளந்தர்யா
அப்பாவை வைத்து 2014ல் கோச்சடையான் என்ற படத்தினை இயக்கியப்பின் ஐயோ காதலே என்ற படத்தினை தயாரித்துள்ளார். சமீபத்தில் தன்னுடைய மகன் வீருக்கு 3வது பிறந்தநாள் அன்று கேக் வெட்டி கொண்டாடினார்.
தற்போது தன்னுடைய காதல் கணவர் விசாகன் வணங்காமுடியுடன் பப்பில் ஆட்டம் போட்டுள்ள வீடியோவை பகிர்ந்துள்ளார் செளந்தர்யா. அந்த வீடியோவில், நானும் என் கணவரும் இணைந்து கழித்த சிறிய, சிறப்பான தருணம், அன்பு நிறைந்த இதயத்துடன் உங்களுடன் பகிர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதை பார்த்து ச்ல என்ன சரக்கு பாட்டிலா? மண்டையில் இருக்கும் கொண்டைய மறந்துட்டீங்களே செளந்தர்யா என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.