திருமணத்துக்கு பின்பும் Situationship மாதிரிதான் இருக்குன்னு சொன்ன கணவர்!! ரகுல் ப்ரீத் சிங் விளக்கம்..
ரகுல் ப்ரீத் சிங்
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட்டில் டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங். பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் ரகுல், Pati Patni Aur Woh Do என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

ஆயுஷ்மன் குர்ரானா, வாமிகா கேபி, சாரா அலி கான், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் இப்படம் வரும் மே 15 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இப்படத்தின் பிரமோஷனுக்காக பேட்டிகளில் கலந்து கொண்டு வரும் ரகுல் ப்ரீத் சிங், தன் கணவருடன் பேட்டியொன்றில் கலந்து கொண்டு பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் பேசிய ரகுலின் கணவர் ஜாக் பக்னானி, திருமணத்திற்குப்பின் நடக்கும் உறவு குறித்து பேசியுள்ளார். அதில், திருமணமானாலும் நாங்கள் சிச்சுவேஷன்சிப்பில் தான் இருக்கிறோம்.
இப்போதுகூட என் எக்ஸ் கேர்ள் ஃபிரெண்ட் போன் செய்தால் நல்லா லவுட் ஸ்பீக்கரில் போட்டுத்தான் பேசுவேன் என்று பந்தாவாக பேசியுள்ளார் இதனை கேள்விப்பட்ட பலரும் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதா? ரகுல் ப்ரீத் சிங் கணவர் ஏன் இப்படி பேசுகிறார் என்ற கேள்விகளும் ட்ரோல்களும் எழுந்து வருகிறது.

எந்த பஞ்சாயத்தும் இல்லை
இந்த ட்ரோல்கள் எல்லைமீறியதால் ரகுல் ப்ரீத் சிங் அதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார்.
அந்த காட்சிகளையும் ட்ரோல்களையும், மீம்ஸ்களையும் பார்த்து நாங்கள் இருவரும் ஜோடியாக சிரித்தோம். அவர் பேசியதை தவறாக புரிந்து கொண்டு ட்ரோல் செய்வதற்கும் ஒரு அளவுண்டு, எங்களுக்குள் எந்த பஞ்சாயத்தும் இல்லை, தேவையான வதந்திகளை கிளப்ப வேண்டாம் என்று ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.