கர்ப்பத்தை காரணம் காட்டி காஜல் அகர்வாலை ஒதுக்கிய ராம்சரண்! இந்த மனசு தான்யா?
தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய இடத்தினை 14 படங்கள் மூலம் பிரபலமானவர் ராம் சரண். நடிகர் சிரஞ்சீவியின் மகனாக சினிமாத்துறையில் அறிமுகமாகி தன் உழைப்பாளர் மக்கள் மனதை ஈர்க்க கடுமையாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் ராஜமெளலி இயக்கத்தில் ஆர் ஆர் ஆர் படம் மிகப்பெரியளவில் ஹிட் கொடுத்து வருகிறது. ஆரம்பத்திலேயே பல கோடிகள் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இப்படத்தினை போன்று ராம் சரண் தன் தந்தையுடன் நடித்த ஆச்சார்யா படமும் இன்னும் 3 வாரங்களில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் பிரமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாவதற்கு முன்பே நடித்திருந்தார். தற்போது கர்ப்பகாலத்தின் இறுதியில் இருக்கும் காஜல் கூடிய சீக்கிரமே குழந்தை பெறவுள்ளார்.
ஆர் ஆர் ஆர் படத்தில் பிஸியாக இருந்த ராம்சரண் தற்போது ஆச்சார்யா படத்தின் பிரமோஷன் வேலைகளில் ஈடுபடவுள்ளார். அதற்காக நேர்காணல்களிலும் கலந்து கொள்ளவுள்ளனர் படக்குழுவினர்.
இந்நிலையில் பிரமோஷனுக்கு நடிகை காஜல் அகர்வாலும் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்காக மும்பையில் இருந்து ஹைதராபாத் வர விரும்பியுள்ளார். ஆனால் இதை கேட்ட ராம் சரண் காஜல் விருப்பத்தை நிராகரித்துள்ளாராம்.
ஏனென்றால் காஜால் தாய்மை காலத்தில் இருப்பதால் ஓய்வெடுக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தான் இதை கூறியிருக்கிறாராம். இந்த நேரத்தில் ஏன் ரிஸ்க் எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளாராம் ராம் சரண்.