ராமாயணா படத்தில் நடிக்க நடிகர்கள், நடிகைகள் வாங்கியுள்ள சம்பளம்.. விவரம் இதோ

Sai Pallavi Yash Ranbir Kapoor
By Kathick Apr 16, 2026 03:30 AM GMT
Report

ரூ. 4000 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா.

இப்படத்தை நிதேஷ் திவாரி இயக்க, ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். ஹான்ஸ் சிம்மர் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கின்றனர்.

ராமாயணா படத்தில் நடிக்க நடிகர்கள், நடிகைகள் வாங்கியுள்ள சம்பளம்.. விவரம் இதோ | Ramayana Movie Cast Salary

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்த ஆண்டு தீபாவளிக்கு முதல் பாகமும், அடுத்த ஆண்டு தீபாவளிக்கு இரண்டாம் பாகமும் வெளிவரவுள்ளது.

இந்த நிலையில், ராமாயணா படத்தில் நடிக்க நடிகர்கள், நடிகைகள் வாங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க.

  • ரன்பீர் கபூர் - ரூ. 150 கோடி
  • யாஷ் - ரூ. 100 கோடி
  • சன்னி தியோல் - ரூ. 40 கோடி
  • சாய் பல்லவி - ரூ. 12 கோடி
  • ரகுல் ப்ரீத் சிங் - ரூ. 1 கோடி - ரூ. 2 கோடி
  • ரவி துபே - ரூ. 2 கோடி - 4 கோடி