90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னி ரம்பாவுக்கு கார் விபத்து.. குழந்தைகளுடன் உயிர்த்தப்பிய விபரீதம்
90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் நடிகை ரம்பா. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற மொழிப்படங்களில் நடித்து பிரபலமான ரம்பா முன்னணி நடிகர்கள் விஜய், அஜித் உள்ளிட்டவர்களுடன் ஜோடி சேர்ந்து கொடிக்கட்டி பறந்தார்.
2010ல் இந்திர குமார் பிரேமானந்தன் என்பவரை திருமணம் செய்து 3 குழந்தைகளை பெற்றெடுத்தார் ரம்பா. சமீபத்தில் கூட நடிகை மீனா கணவர் இறப்பிற்கு அஞ்சலி செலுத்து வெளிநாட்டில் இருந்து வந்தார்.
அதன்பின் வெளிநாட்டில் திருமணத்திற்கு பின் செட்டிலாகி அங்கேயே வசித்து வருகிறார்.
இந்நிலையில், தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து கூப்பிட்டு வர காரில் சென்றுள்ளார். பள்ளியில் குழந்தைகளை ஏற்றி வீடு திரும்பும் போது கார் விபத்துக்குள்ளாகியது. விபர்த்தின் தாங்கள் உயிர் தப்பியதாகவும் தன் மகள் சாஷா மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விரையில் வீடு திரும்ப பிராத்திக்கும் படி புகைப்படத்துடன் சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.