ஆடையின்றி இருக்கும் காட்சிகள்.. நடிகை ரம்யா கிருஷ்ணன் வெளியிட்ட கண்ணீர் வீடியோ!
90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ரோஜா. அரசியலில் ஆர்வம் கொண்ட இவர் தற்போது சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்து வருகிறார்.
சமீபத்தில் நடிகை ரோஜா சந்திரபாபு நாயுடு குறித்து விமர்சனம் செய்ததால் தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி, மோசமான வார்த்தைகளால் ரோஜாவை தாக்கி பேசியுள்ளார்.
அதில் அவர், ரோஜா ஆபாச படத்தில் நடித்தார். அதை நான் வெளியிடுவேன் என்று கூறினார். இவரின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
பல நடிகைகளை மற்றும் பிரபலங்கள் ரோஜாவுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் இது தொடர்பாக பேசியுள்ளார்.
அதில் அவர், பாரத பிரதமர் மோடி, இந்த விவகாரம் குறித்து தயவு செய்து இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியா என்ற தாயை பெண்ணாக மதித்து நாங்கள் அவரை கொண்டாடுகிறோம்.
அப்படி இருக்கும் இந்த நாட்டில் இது போன்ற விஷயங்கள் நடக்கிறது. ரோஜாவை மோசமாக பேசிய அந்த நபரை சும்மா விட கூடாது ,மன்னிக்கக்கூடாது. நான் ரோஜாவுக்கு துணைநிற்கிறேன் என்று ரம்யா கிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதோ அந்த வீடியோ
— Ramya Krishnan (@meramyakrishnan) October 7, 2023