ஒராண்டு சிறை, நோ ஜாமீன்..தங்கத்தை கடத்தில் வாழ்க்கையை தொலைத்த நடிகை..

Gold smuggling Bengaluru Gold
By Edward Jul 17, 2025 01:30 PM GMT
Report

ரன்யா ராவ்

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நடிகை ரன்யா ராவ், கன்னட திரையுலகில் தனது பயணத்தை 2014ல் துவங்கி, நான் ஈ பட வில்லன் கிச்சா சுதீப் இயக்கிய படத்தில் அறிமுகமானார்.

அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்ற தன்யா, தமிழில் ஜி என் ஆர் குமரவேலன் இயக்கத்தில் வாகா படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்தார். இதனைதொடர்ந்து கன்னடத்துக்கு சென்ற தன்யா, அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.

ஒராண்டு சிறை, நோ ஜாமீன்..தங்கத்தை கடத்தில் வாழ்க்கையை தொலைத்த நடிகை.. | Ranya Rao One Year In Jail For Gold Smuggling

இந்நிலையில் துபாயில் இருந்து சில மாதங்களுக்கு முன் பெங்களூரு விமானத்தில் வந்திறங்கிய போது விமானநிலைய அதிகாரிகளின் சோதனையின் போது ஜாக்கெட்டில் 15 கிலோ தங்கத்தை மறைத்து கடத்தி வந்தார்.

நோ ஜாமீன்

இதுகுறித்து கைது செய்யப்பட்ட தன்யா வீட்டில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை செய்ததில் 67 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை கைப்பற்றினார். சட்டவிரோத பண பரிமாற்றம் செய்த குற்றத்திற்காக தன்யா ராவ் மீது வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டார்.

ஒராண்டு சிறை, நோ ஜாமீன்..தங்கத்தை கடத்தில் வாழ்க்கையை தொலைத்த நடிகை.. | Ranya Rao One Year In Jail For Gold Smuggling

இந்த விவகாரத்தை விவாரித்த நீதிமன்றம், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என்பதால் ரன்யாவுக்கு ஜாமீன் வழங்கியது கோர்ட். ஆனால் அந்நிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழும் ரன்யா கைது செய்யப்பட்டிருப்பதால் அவரால் ஜாமீனில் வெளிவர முடியவில்லை.

தற்போது அந்நிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழே இருக்கும் ஆலோசனை வாரியம் இந்த வழக்கை விசாரித்ததில், ரன்யாவுக்கு ஒராண்டு சிறைதண்டனை விதித்தும் தண்டனை காலம் முடியும்வரை ரன்யாவால் பிணை ஏதும் கோர முடியாது என்றும் உத்திரவிட்டுள்ளனர். இதனால் ஒராண்டு சிறையில் இருப்பது உறுதியாகியுள்ளது.