வாரிசு படத்தில் ஒன்றுமே இல்லை..இதற்காக மட்டும் தான் நடித்தேன் சர்ச்சை நடிகை பேட்டி
தென்னிந்திய படங்களில் மட்டும் இல்லாமல் ஹிந்தி படங்களிலும் நடித்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. பல தெலுங்கு படங்களில் இவர் நடித்திருந்தாலும், கார்த்தி நடிப்பில் 2021 -ம் ஆண்டு வெளிவந்த சுல்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இதன் பின் வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் வெளியாகி சில நாட்களிலேயே பல வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
வாரிசு படத்தில் ராஷ்மிகா சில காட்சிகளில் மட்டும் தான் வருவார். இதனால் பலரும் இந்த படத்தில் ராஷ்மிகா நடித்திருக்க தேவையில்லை என்றெல்லாம் இணையத்தில் பதிவிட்டு வந்தனர்.
இது தான் காரணம்
இந்நிலையியல் இதை குறித்து பதில் அளித்த ராஷ்மிகா," எனக்கு தெரியும் இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தில் சில காட்சிகளும், இரண்டு பாடல்களும் மட்டும் தான் இருந்தது, பெரிதாக ஒன்றும் இல்லை. இருந்தாலும் நான் தளபதி விஜய்க்காக மட்டும் தான் நடித்தேன்" என்று கூறியிருந்தார்.
இவர் சில கருத்துக்களை ஓப்பனாக பேசிவிடுவதால் பல சர்ச்சைகளில் மாட்டிக்கொள்வது குறிப்பிடத்தக்கது.