காதல் மட்டுமின்றி திருமணத்தையும் ரகசியமாக வைத்திருக்கும் புஷ்பா நடிகை

Marriage Rashmika Mandanna Vijay Devarakonda
By Parthiban.A Feb 21, 2022 12:34 PM GMT
Report

நடிகை ராஷ்மிகா தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருக்கிறார். அவர் தமிழில் நடித்த முதல் படமான சுல்தான் படம் பிளாப் தான் என்றாலும் தெலுங்கில் அவர் நடித்த புஷ்பா படம் பல மொழிகளில் சூப்பர்ஹிட் ஆகி இருக்கிறது. குறிப்பாக ஹிந்தியில் அது 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்து இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்கட்டும் ராஷ்மிகா பற்றி மிகவும் பரபரப்பான ஒரு புது தகவல் பரவி வருகிறது. அவரது திருமணம் இந்த வருடம் நடைபெற இருக்கிறது என்பது தான் அது. பிரபல தெலுங்கு ஹீரோ விஜய் தேவரகொண்டாவை தான் அவர் திருமணம் செய்யபோகிறார் என கூறப்படுகிறது.

ராஷ்மிகா அவரது காதல் பற்றியே இதுவரை வெளிப்படையாக பேசவில்லை, தற்போது திருமணம் பற்றி வெளியாகி இருக்கும் செய்திக்காவது வாய்திறப்பாரா? இல்லை அதையும் ரகசியமாகவே வைத்திருப்பாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.