லோகேஷ் கனகராஜை முதுகில் குத்தினாரா பிரபல இயக்குனர், ரசிகர்கள் கேள்வி மேல் கேள்வி
லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ் இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனராக ஆகிவிட்டார். இவர் இயக்கத்தில் வெளிவந்த மாநகரம், கைதி, விக்ரம், மாஸ்டர், லியோ என அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் தான்.
இந்நிலையில் லோகேஷ் மாஸ்டர், லியோ ஆகிய படங்களில் படத்தின் வசன உதவிக்காகவும், திரைக்கதையை மெறுக்கேற்றவும் மேயாத மான் படத்தை இயக்கிய ரத்னகுமார் அவர்களை நியமித்தார்.
இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் தான், ஆனால், லோகேஷ் தயாரிப்பதாக இருந்த பென்ஸ் படத்திலிருந்து திடீரென்று ரத்னகுமார் விலக்கப்பட்டார்.
அவருக்கு பதிலாக அந்த படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கவுள்ளார், தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ரெட்ரோ படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்தது.
இதை பார்த்த, ரத்னகுமார் ‘வெறும் படத்தின் ரீச் ஆக மட்டும் மல்டிஸ்டார்களை பயன்படுத்தாமல், சரியாக கதைக்கு தேவைக்காக பயன்படுத்தினீர்கள்’ என்பது போல் ஒரு டுவிட் செய்துள்ளார், அதை கண்ட அனைவரும் ரத்னா, லோகேஷை முதுகில் குத்துகிறார், அவர் தான் பல நடிகர்களை வைத்து படம் எடுப்பவர் என கூறி வருகின்றனர்.