மேட்சிங் மேட்சிங் டிரெஸ்!! விவாகரத்துக்கு முன்பே தோழியுடன் ஜோடியாக நடிகர் ரவி மோகன்..
ரவி மோகன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ரவி மோகன், கராத்தே பாபு, பராசக்தி, ஜெனி போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் தன்னுடைய பெயரை மோகன் ரவி என்று இனிமேல் கூப்பிடவேண்டும் என்று ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதேநேரம் கடந்த ஆண்டு 2024 செப்டம்பர் மாதம் தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப்போவதாக அறிக்கை வெளியிட்டார்.
15 வருட திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்ள என்ன காரணம் என்று பலர் பல தகவலை கூறி வந்தனர். இந்த விஷயத்தில் எனக்கு விவாகரத்துக்கு விருப்பம் இல்லை என்றும் தன் குழந்தைகளுக்கு இதுபற்றி ஏதும் தெரியாது, அவரிடம் பேச வேண்டும் என்று ஆர்த்தி தெரிவித்திருந்தார்.
இதைதொடர்ந்து ரவி மற்றும் ஆர்த்தி நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில் சமரச பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்நிலையில் ரவி மோகன் பாடகி ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக சில தகவலும் இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் பரவியது. இதுகுறித்து ரவி மோகனும் அவர் என் தோழி என்று அறிவித்தார்.
கெனீஷா
இந்நிலையில் சமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணம் பிரமாண்ட முறையில் நடைபெற்றது. திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் ரவி மோகனும், பாடகி கெனீஷாவும் இணைந்து வந்துள்ளனர்.
திருமணத்திற்கு இருவரும் கோல்டன் கலர் ஆடையணிந்து வந்ததுடன் இருவரும் ஜோடியா உட்கார்ந்து இருந்த புகைப்படங்களும் இணையத்தில் பரவி வருகிறது.
Actor @iam_RaviMohan makes his first public appearance with partner #Kenishaa @ #Velswedding pic.twitter.com/IorO8WfPda
— sridevi sreedhar (@sridevisreedhar) May 9, 2025
