முருகன் இருக்க பயம் ஏன்!! தை பூசம் அதுவும் மகாலட்சுமி ஜோடியின் க்யூட் புகைப்படம்

Ravindar Chandrasekaran Mahalakshmi
By Edward Feb 05, 2023 04:30 PM GMT
Report

சின்னத்திரையில் சீரியல் நடிகையாக பிரபலமாகி மக்கள் மத்தியில் நல்லவரவேற்பு பெற்று வருபவர் நடிகை மகாலட்சுமி. சில வருடங்களுக்கு முன் கணவரை விவாகரத்து செய்து மகனுடன் தனிமையில் வாழ்ந்து வந்த மகாலட்சுமி ஈஸ்வருடன் தொடர்பில் இருந்தார்.

அந்த விசயம் பெரியளவில் பிரச்சனையை ஏற்படுத்தியதால் அவரைவிட்டு ஒதுங்கி வாழ்ந்து வந்த மகாலட்சுமி திடீரென தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரு ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் செப்டம்பர் மாதம் திருமணம் செய்து அதிர்ச்சி கொடுத்தனர்.

முருகன் இருக்க பயம் ஏன்!! தை பூசம் அதுவும் மகாலட்சுமி ஜோடியின் க்யூட் புகைப்படம் | Ravindar Share Out With Wife In Temple Post

இந்த விசயம் பெரியளவில் பேசப்பட்டு ரவீந்தரை காசுக்காக கல்யாணம் செய்தார் என்று மகாலட்சுமி மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது. அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் கணவருடன் ரொமான்ஸ் செய்த புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.

இடையில் ஆடை அணிகலன்களை விளம்பரம் செய்து சைட் பிஸ்னசும் செய்து வருகிறார் மகாலட்சுமி. மகாலட்சுமி ரவீந்தர் ஞாயிற்று கிழமையானால் போதும் எங்கயாவது அவுட்டிங் சென்றுவிடுவார்கள். இன்று தை பூசம் அதுவும் கோவிலுக்கு சென்று முருகன் இருக்க பயம் ஏன் என்று மனைவியுடன் எடுத்த க்யூட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.