அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டதற்கு இதுதான் காரணம்? மறைந்த நடிகர் விவேக்கின் கடைசி வீடியோ

vaccine corona virus death vivek
By Edward Apr 17, 2021 06:55 AM GMT
Edward

Edward

Report

இந்திய சினிமா வட்டாரத்தையே காலை 4.35 முதல் அதிரவைத்த செய்தி நடிகர் விவேக்கின் மரணம் தான். கொரானா விழிப்புணர்விற்காக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் கொரானா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

தடுப்பூசி போடப்பட்ட அடுத்த நாளே அவருக்கு இதயத்தில் அடைப்பு இருந்ததாக மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து இன்று காலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதற்கு காரணம் தடுப்பூசி போடப்பட்டது தான் காரணம் என்று கூறப்பட்டு வந்த நிலையில் கொரானா தடுப்பூசி அரசு மருத்துவமனையில் போட்டுக்கொண்டதற்கு என்ன காரணம் என்று விவேக் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் அவர் கூறியது, நான் ஏன் அரசு மருத்துவமனையில் போட்டுக்கொண்டேன் என்ற கேள்வி எழும் எனக்கு தெரியும். தனியார் மருத்துவமனையில் நான் ஏன் போடவில்லை என்றால், பெரும்பாலான மக்கள் அரசு மருத்துவமனையில் சென்று தான் சிகிச்சை பெருகிறார்கள். அரசும் மக்களுக்கு சேவை செய்து வருகிறது. அதனால் தான் அங்கு போட்டுகொண்டேன்.

தடுப்பூசி போட்டுக் கொண்டால் பக்கவிளைவுகள் ஏற்படுமா என்ற கேள்வி மக்களிடம் எழுந்து வதந்திகளாக பரவும். அந்த வதந்திகளை தடுக்கத்தான் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டேன் என்று கூறினார். மேலும், இந்த ஊசி போட்டால் எந்த ஆபத்தும் வராது. பாதுகாப்பு உண்டு என தெரிவித்துள்ளார்.

ஆனால் இதற்கு எதிர்மறையாக விவேக் போட்டுக்கொண்ட தடுப்பூசி தான் அவரின் மரணத்திற்கு காரணமாக இருந்துள்ளது என்று பலர் விமர்சித்தும் வருகிறார்கள். இதை அரசு மருத்துவமனை சார்ப்பாக அது காரணம் இல்லை என்று பேட்டியில் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.