90- களில் கொடிகட்டி பறந்த மைக் மோகன்..சினிமாவில் இருந்து காணாமல் போன காரணம் இது தானா?
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக திகழ்ந்தவர் நடிகர் மைக் மோகன். இவர் பாலுமகேந்திரா இயக்கத்தில் 1977 -ம் ஆண்டு வெளியான கோகிலா என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற அனைத்து மொழி படங்களில் நடித்த மோகன், டாப் நடிகராக திரைத்துறையில் கொண்டாடப்பட்டார்.
இது தான் கரணமா?
இவர் படத்தில் வசனம் பேசும் மென்மையான குரலுக்காகவே பல ரசிகர் கூட்டம் இருந்தனர். ஆனால் அது அவரின் உண்மையான குரல் இல்லை. இந்த குரலுக்கு சொந்தக்காரர் அவரின் நெருங்கிய நண்பர் சுரேந்தர்.
"மோகனின் படங்கள் வெற்றி பெறுவதற்கு காரணம் என்னுடைய குரல் தான்" என்று கூறியுள்ளார் சுரேந்தர். இதனால் இவர்களுக்கு இடையே மோதல்கள் வெடித்தது.
அன்று முதல் மோகனின் படத்திற்கு டப் செய்ய போவதில்லை என்று சுரேந்தர் முடிவெடுத்துவிட்டார் . இதன் பின் வந்த மோகனின் படங்கள் அனைத்தும் தோல்வியை சந்தித்தது, இதனால் தான் அவர் சினிமாவை விட்டு நீங்க காரணம் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
தற்போது அவர் நீண்ட நாள் பிறகு ஹாரா என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படம் திரையரங்குகளில் விரைவில் வெளியகவுள்ளது.l