மனைவி சங்கீதா கர்ப்பம்.. 47 வயதில் அப்பாவாகும் ரெடின் கிங்ஸ்லி..
ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா
சினிமாவில் சைட் நடன கலைஞராக பல படங்களில் பணியாற்றி வந்த நடிகர் ரெடின் கிங்ஸ்லி, இயக்குநர் செல்சன் இயக்கத்தில் வெளியான கோலமா கோகிலா, டாக்டர் போன்ற படங்களில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். அதன்பின் அண்ணாத்த, ஜெயிலர், பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் காமெடி நடிகராக நடித்துவந்தார்.
கடந்த ஆண்டு சீரியல் நடிகை சங்கீதாவை சாதாரண முறையில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் சீரியலில் நடித்தும் விளம்பரங்களில் நடித்தும் வருகிறார் சங்கீதா. இந்நிலையில் ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா ஜோடி திருமணமாகி ஒராண்டிற்கு மேல் ஆகியுள்ளது.
சங்கீதா கர்ப்பம்
தற்போது சங்கீதா கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. இதுகுறித்து சங்கீதா - ரெடின் தரப்பில் எந்தவித அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாவிட்டாலும் சங்கீதா 5 மாதம் கர்ப்பமாக இருக்கலாம் என்ற தகவலும் கசிந்துள்ளது. 47 வயதில் அப்பாவாகிய ரெடின் கிங்ஸ்லி - சங்கீதாவை பலரும் வாழ்த்தி வருகிறார்கள்.