20 வயதில் 3முறை அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண கேட்டார்!! அஜித் பட நடிகை ஓப்பன் டாக்..
ரெஜினா கேசண்ட்ரா
சிவகார்த்திகேயனின் கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் மூலம் பிரபலமானவர் நடிகை ரெஜினா கேசண்ட்ரா. இப்படத்தினை தொடர்ந்து ராஜதந்திரம், மாநகரம், மிஸ்டர் சந்திரமெளலி போன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்து சமீபத்தில் ரீலிஸான விடாமுயற்சி படம் வரை நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தமிழ் மட்டுமில்லாம தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் நடித்தும் வருகிறார்.
அட்ஜெஸ்ட்மெண்ட்
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். அதில், நான் நடிக்க வந்தபோது ஒருவர் எனக்கு கால் செய்து அட்ஜெஸ்ட்மெண்ட் செய்வீர்களா என்று கேட்டார்.
அதற்கு எனக்கு அர்த்தம் புரியவில்லை, அவர் 3 முறை திரும்ப திரும்ப கேட்டார். அப்போது தான் புரிந்தது. அதன்பின் நான் அவரிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் போனை கட் செய்துவிட்டேன் என்று கூறியிருக்கிறார்.
மேலும் நான் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் என் வயது 20 இருக்கும். நான் காலேஜ் படித்துக் கொண்டிருக்கும் போது கூட ஷாப்பிங் சென்ற இடத்தில் ஒருவர் என் உதட்டை பிடித்து கிள்ளிவிட்டார். ஆகையால் எல்லா இடங்களிலும் பெண்களுக்கு இதுபோன்ற பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது.
அதையெல்லாம் கடந்து தான் பெண்கள் இப்போது வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் தமிழ் பெண்கள் அமைதியாக அதனை கடந்துவிடுகிறார்கள். ஆனால் வட இந்தியாவில் அப்படி இருக்க முடியாது அவர்கள் உடனே முடியாது என்று பதில் சொல்லிவிடுவார்கள் என்று ரெஜினா பகிர்ந்துள்ளார்.