ரேவதியை செம கடுப்பாக்கிய கேள்வி, உடனே பதிலடி
ரேவதி 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகை. இவர் நடித்தாலே அந்த படம் நம்பி போகலாம் என நம்பும் அளவிற்கு தரமான படங்களாக நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை ரேவதி சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார். அப்போது இவரிடம் பத்திரிகையாளர் ஒருவர் பெண்கள் உடை குறித்து ஒரு கேள்வியை கேட்டார்.

அதாவது சீக்ரெட் பகுதிகள் தெரியும் படி உடை அணிகிறார்கள், பெர்சனல் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்கிறார்கள் என்பது போல் அவர் கேள்வி கேட்க, அதற்கு நடிகை ரேவதி ”திருமணத்தில் பட்டு புடவை அணிய வேண்டும், பீச்சில் பிகினி போடவேண்டும் என்று ஒன்று உள்ளது. ஏங்க அதற்காக புடவையை கட்டிக்கொண்டு கடலில் குதிக்கவா முடியும்” என கோபமாக பதில் அளித்தார்.
இதை பார்த்த சிலர் ரேவதி தான் டென்ஷன் ஆகிவிட்டார் என கூற, பலரும் முதலில் ஏன் இந்த கேள்வி என கேள்வி கேட்டவரை தான் திட்டி வருகின்றனர்.