இப்படியொரு கேவலமான வேலையை செய்திருக்கிறாரா கமல் ஹாசன்!! உண்மையை உடைத்த ரியாஸ் கான்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் கமல் ஹாசன் 2001ல் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் வெளியான படம் ஆளவந்தான். இப்படம் வெளியான போது மோசமான விமர்சனத்தை சந்தித்து தோல்வி படமாக கமல் ஹாசனுக்கு அமைந்தது.
தற்போது இப்படம் பல ஆண்டுகள் கழித்து ரஜினியின் முத்து படமும் கமலின் ஆளவந்தான் படமும் ஒரே நேரத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. முத்து 23 லட்சம் வசூலும் ஆளவந்தான் 50 லட்சம் வசூலும் பெற்றுள்ளது.
இந்நிலையில் நடிகர் ரியாஸ் கான் ஆளவந்தான் படத்தில் நடந்த ஒரு ரகசியத்தை உடைத்து ஷாக் கொடுத்துள்ளார். தன் மனைவி உமா ரியாஸ் பேட்டியெடுக்கப்பட்ட அந்த வீடியோவில், நீங்கள் ஆளவந்தான் படத்தில் சுல்தான் ரோலில் நடித்திருந்தீர்கள்.
ஆனால், கமல் நடித்த இரட்டை வேடத்தில் நந்து கேரக்டருக்கு பாடி டபுள் செய்திருக்கிறீர்கள். எந்தளவு நீங்கள் கஷ்டப்பட்டது, எந்தந்த விசயத்திற்கு நீங்கள் டூப் போட்டது உங்களுக்கு மட்டும் தான் தெரியும். படத்தின் தயாரிப்பாளரோ நடிகரோ யாரும் வெளியில் சொல்லவில்லை, அதை நீங்களே சொல்லுங்கள் என்று உமா ரியாஸ் கேட்டுள்ளார்.
அதற்கு ரியாஸ் கான், பெரியதாக வெளியில் தெரியவில்லை, பேசப்படவில்லை என்பது உண்மை தான். நான் சொல்லி தான் பலர் என்னை பார்த்து அப்படி கேட்பார்கள். அந்த சமயத்தில் தனியார் ஊடகத்தில் சிறியதாக பேசப்பட்டது. வேறு எங்கயும் அதை பற்றி பேசப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
ஆனால் அப்படம் எனக்கு பெரிய இடத்தை கொடுத்து அவருக்கு பாடி டபுள் பண்ணதால் அவருடன் படம் முழுவதும் இருந்தேன் என்று கூறியிருக்கிறார். அப்படி வேறொரு நடிகர் முழுவதும் டூ போடப்பட்டதை கமலும் தயாரிப்பாளரும் மறைத்துவிட்டார்களே என்று நெட்டிசன்கள் கமல் ஹாசனை கலாய்த்து வருகிறார்கள்.
யோவ் @ikamalhaasan ஆளவந்தான் படம் முழுக்க டூப் போட்டது ரியாஸ் கான் னு சொல்லாமையே மறச்சுட்டீங்க. பலே ஆளு தான் யா?BODY DOUBLE வச்சே முழு படம் எடுத்துருக்கானுங்க. pic.twitter.com/JHqpSCEXBa
— RajaGuru (@swatson2022) December 15, 2023