வீட்டுக்கு தெரியாமல் 21 வயதில் ஓடிப்போனேன்.. இரண்டு முறை திருமணம் செய்து கொண்ட ஆர் ஜே பாலாஜி..
ஆஜே-வாக பணியாற்றி பிரபல தொலைக்காட்சி சேனல்களில் விஜேவாகவும் காமெடி நடிகராகவும் நடித்து பிரபலமானவர் நடிகர் ஆர்ஜே பாலாஜி. காமெடி நடிகராக பல படங்களில் நடித்து வந்த ஆர்ஜே பாலாஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விவேசம் போன்ற படங்களை இயக்கி இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். சமீபத்தில் சிங்கப்பூர் சலூன் என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ள ஆர்ஜே பாலாஜி படத்தின் பிரமோஷனுக்காக பல பேட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
இன்று இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், திருமணம் பற்றிய சில விசயத்தை பகிர்ந்திருக்கிறார். ஒரு டாக்ஸில் ஆர்ஜே பாலாஜியிடம், 4 அல்லது 5 மாதத்துக்கு ஒரு போன் நம்பர் மாத்துவேன். எனக்கு இரண்டு முறை கல்யாணம் நடந்தது. நான் ஓடிப்போய் கல்யாணம் செய்துகொண்டேன் என்றும் வீட்டில் எல்லோரும் எதிர்ப்பார்க்கவில்லை.
அதனால், நேரில் எங்களை கூப்பிட்டு முனி படம் எடுத்த ஷூட்டிங்கில் தான் கல்யாணம் செய்தோம். முதலில் ஓடிப்போய் கல்யாணம் செய்தேன், அதன்பின் அவர்களையே குடும்பத்தினர் முன்னிலையில் இன்னொரு கல்யாணம் செய்தேன் என்று கூறியிருக்கிறார்.
இதற்கு சித்து, இரண்டாம் கல்யாணம் பண்ணிக்கலாமே என்று கேட்டதற்கு, அதாவது இந்த ஷோ முடிந்ததும் இந்த படம் பிரமோஷனுக்கு ஏண்டா வந்தோம் என்று யோசிக்காமல் ஜெயில்லையும் சென்று அப்படி யோசிக்கனும் அப்படித்தானே என்று ஆர்ஜே பாலாஜி காமெடியாக பதிலளித்திருக்கிறார்.
மேலும் ஏண்டா நல்ல நாள்ல கல்யாணம் பண்ணாம ஓடிப்போய் கல்யாணம் பண்ணிங்க என்று கூறி நல்ல நாளில் கல்யாணம் பண்ணி வெச்சாங்க.
நான் 21 வயதில் ஓடிப்போய் கல்யாணம் பண்ணியதாகவும் அப்போது ஆர்ஜே-வாக வேலை செய்யவில்லை, கால் லட்டர் மட்டும் இருந்தது, இளமை பருவம், 9700 ரூபா சம்பளம், ஹாஸ்டலில் இருந்த போது ஓடிப்போ கல்யாணம் பண்ணதை என் அப்பாவிடம் சொன்னேன், முதல் மனைவி இரண்டாம் மனைவி எல்லாம் ஒரே மனைவி தான் என்று ஆர்ஜே பாலாஜி கூறியுள்ளார்.