சுருங்கிப்போச்சு.. நடிப்புன்னாலும் இப்படியா ரோபோ ஷங்கர்! - வைரலாகும் வீடியோ

Robo Shankar
By Parthiban.A Mar 17, 2024 04:10 PM GMT
Report

நடிகர் ரோபோ ஷங்கர் சமீபத்தில் மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்து வந்தார். மேலும் குடிப்பழக்கமும் இருந்ததனால் அவருக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

உடல் எடை குறைத்து படுஒல்லியாக ரோபோ ஷங்கர் மாறியது ரசிகர்களுக்கே அதிர்ச்சி ஏற்படுத்தியது. இந்த நிலையிலும் அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

சுருங்கி போச்சு

ரோபோ ஷங்கர் ஒரு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் அமர்ந்துகொண்டு அந்த பட இயக்குனரை திட்டி இருக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது. ஊட்டி குளிரில் அதிகாலை 6 மணிக்கு முன் ஷூட்டிங் வர சொல்றாங்க.

அதுவும் மறுநாள் காலை 6 மணி வரை ஷூட்டிங்காம் என சொல்லி கோபமாக பேசி இருக்கிறார் அவர். குளிரில் சுருங்கிப்போச்சு, நான் ஊசிபோட்டுட்டு நடிக்க வந்திருக்கிறேன் என சொல்லி அவர் தான் இன்ஜக்ஷன் போட்டுக்கொண்ட இடத்தையும் காட்டி இருக்கிறார் அவர்.

படத்தின் ப்ரோமோஷனுக்காக தான் இப்படி ரோபோ ஷங்கர் திட்டுவது போல வீடியோ வெளியிட்டு இருக்கின்றனர். நடிப்பு என்றாலும் இப்படியா?