விஜய்யின் பிகில் படத்துல நடிக்க இவ்வளவு தான் சம்பளம்!! இந்திரஜா சங்கர் ஓபன் டாக்..

Vijay Robo Shankar Indraja Shankar
By Edward Apr 12, 2026 12:45 PM GMT
Report

இந்திரஜா சங்கர்

சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகர் ஷோபோ சங்கர், டாப் நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்தார். அதன்பின் நிகழ்ச்சி நடுவராகவும் திகழ்ந்து வந்த ரோபோ ஷங்கர், தன்னுடைய மகள் இந்திரஜாவை பிகில் படத்தில் நடிக்க வைத்து அழகு பார்த்தார்.

விஜய்யின் பிகில் படத்துல நடிக்க இவ்வளவு தான் சம்பளம்!! இந்திரஜா சங்கர் ஓபன் டாக்.. | Robo Shankar Daughter Indraja Open Bigil Salary

அதன்பின் ஒருசில படங்களில் நடித்து வந்த ரோபோ சங்கர், உடல் நலக்குறைவால் சில ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்தார். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்தி முடித்த சில மாதங்களில் அவர் உயிரிழந்தது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்திரஜா, கடந்த 10 ஆம் தேதி ரிலீஸான TN 2026 படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். படத்தின் பிரமோஷனுக்காக பேட்டிகளில் கலந்து கொண்டு பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.

பிகில் சம்பளம்

சமீபத்தில் நடிகரும் தொகுப்பாளருமான அசார் யூடியூப் சேனலுக்கு பேட்டிக்கொடுத்துள்ளார்.

விஜய்யின் பிகில் படத்துல நடிக்க இவ்வளவு தான் சம்பளம்!! இந்திரஜா சங்கர் ஓபன் டாக்.. | Robo Shankar Daughter Indraja Open Bigil Salary

அதில், பிகில் படத்தில் எவ்வளவு சம்பளம் வாங்கியது குறித்து பகிர்ந்துள்ளார். பிகில் படத்தில் இருந்து இந்த படம் வரைக்கும் நான் கதையே கேட்டதில்லை, அந்த இடத்தில் சீன் சொல்லுவார்கள் நடிப்பேன்.

பிகில் படத்திற்காக ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை ஷூட் போனேன், அதன்பின் டப்பிங் போனேன். அதற்காக எனக்கு சம்பளமாக ரூ.3 லட்சம் பேசி கொடுத்தார்கள். அப்பாவிடம் சம்பளம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று சொன்னேன். அதற்கு அப்பா என்னிடம், நான் விஜய் சார் கூட க்ரீன்மேட்டில் நடிக்க எனக்கு 15 வருடம் ஆகியது.

புலி படத்தில் அப்படி நடிக்க எனக்கு அத்தனை வருடமாச்சு, ஆனால் நீ, உன் முதல் படமே அவருடன் நடித்து அங்கீகாரம் கிடைத்திருக்கு, கத்துக்கொள் என்று சொன்னார். ஆனால் TN 2026 படத்தில் ஒரே நாள் தான் நடித்தேன், அதற்காக ரூ.40 ஆயிரம் தான் சம்பளம் கொடுத்தார்கள் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார் இந்திரஜா.