16 வயசு வித்தியாசமா!! பேட்டியில் கோபப்பட்டு எழுந்து சென்ற ரோபோ சங்கர் மகள் இந்திரஜா...
பிரபல நகைச்சுவை நடிகரான ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா ஷங்கரின் திருமணம் மதுரையில் நடந்து முடிந்தது. ரிசப்ஷன் சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர். ரிசப்ஷனுக்கு மட்டும் 9000 பேர் வந்ததாக வீடியோவில் ரோபோ ஷங்கர் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் ரோபோ ஷங்கரின் மனைவியும், அவரது மருமகனும் ஒரே மேடையில் நடனம் ஆடிக்கொண்டிருந்தனர்.
அப்போது ரோபோவின் மனைவி உதட்டில் கார்த்திக் முத்தம் கொடுத்துவிட்டார். இந்த விஷயம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது எதிர்ப்பாராமல் அக்கா திரும்பியதால் நடந்த ஒன்று என்று இந்திரஜா கணவர் தெரிவித்திருந்தார். அதேபோல் இருவருக்கும் 16 வயது வித்தியாசம் என்று இணையத்தில் பேசப்பட்டு வருவது குறித்த கேள்வியை பார்த்த இந்திரஜா ஷாக்காகியிருக்கிறார்.
எந்த தைரியத்தில் இப்படியொரு கேள்வி கேட்கிறீங்க, எங்களுக்கு 9 வயது தான் வித்தியாசம், இந்த மாதிரி கேள்விகளுக்கு ஏற்கனவே கூறிவிட்டோம் என்று கோபப்பட்டு எழுந்து சென்றிருக்கிறார்.
மேலும், இந்திரஜாவையும் அவரது கணவர் கார்த்திக்கையும் பிரியங்கா சமாதானப்படுத்தி உட்கார வைத்திருக்கிறார். மேலும் பேசிய ரோபோ சங்கர் மனைவி பிரியங்கா, எங்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும் 14 வருடம் வித்தியாசம், அவங்கள் 40 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து எங்களை வளர்த்து வைத்திருக்கிறார்கள்.
அதன்பின் இது பிராங்க் தான் என்று இந்திரஜா தெரிவித்துள்ளார். இருவருக்கும் ஓகே இல்லையா என்பதை வைத்து தான் அதெல்லாம், ஒத்துழைத்து போவது தான். இவ்வளவு வயசு வித்தியாசம் என்பதெல்லாம் ஒன்றும் இல்லை என்று கூறியிருக்கிறார் இந்திரஜா - கார்த்திக்.