ரோஜா மகளின் முகத்தை தவறான புகைப்படத்தில் மார்பிங் செய்த நபர்கள்.. வருத்தத்தில் நடிகையின் மகள்

Roja
By Kathick Dec 30, 2022 10:45 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக ஒரு காலத்தில் வலம் வந்தவர் ரோஜா. ஆனால், தற்போது அரசியலில் பிஸியாக இருக்கிறார். இவர் இயக்குனர் செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். இதில் மூத்த மகள் தான் அனுஷ் மாளிகா.

இந்நிலையில், நடிகை ரோஜா சில நாட்களுக்கு முன் அளித்த பேட்டி ஒன்றில் தனது மகளின் முகத்தை வைத்து தவறான புகைப்படத்தில் மார்பின் செய்து தவறான முறையில் சித்தரித்ததாக கூறியுள்ளார். இதை பார்த்த அவருடைய மகள் மிகவும் வருத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

வருத்தப்பட்ட தனது மகளுக்கு 'நம்மை போன்ற பிரபலங்களுக்கு இப்படி நடப்பது இயல்பு, அவருத்தப்படாதே' என்று ஆறுதல் கூறியுள்ளார் ரோஜா. மேலும், தனக்கு கூட இப்படி நடந்ததாகவும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.