என்னடா இது அரண்மனை பேய்-க்கு வந்த சோதனை? தலைவித்து மிரட்டும் ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா
சன் தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து வரும் சீரியல் ரோஜா. 1000 எபிசோட்டுக்களை தாண்டியுள்ள இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிப்பு சூர்யன், நடிகை பிரியங்கா நல்காரி நடித்து வருகிறார்கள்.
இந்த சீரியலில் காட்சிப்படுத்தும் சில சீன்கள் லாஜிக்கில் வரம்பு மீறி எடுக்கப்பட்டு வருகிறது. இதனை நெட்டிசன்கள் கலாய்த்து இணையத்தில் மீம்ஸ்களை பகிர்ந்து வைரலாக்கியும் வருகிறார்கள். தற்போது கதையை பேய்-ஐ வைத்து ரூட்டை மாற்றியிருக்கிறார்கள்.
ரோஜாவை சிலர் கடலில் தூக்கி போட்டு வைத்தில் இருந்த குழந்தைக்காக கொலை செய்து விடுகிறார்கள். இதை பழிவாங்கும்படியான காட்சியாக ரோஜா சீரியலை மாற்றியுள்ளனர்.
ரோஜா பேயாக மிரட்டும் காட்சியின் பிரமோ வெளியாகியுள்ளது. அந்த காட்சியில் அரண்மனை படத்தில் பின்னணி இசையை பயன்படுத்தியதை வைத்து தற்போது ரோஜா சீரியல் கேலி கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.
