என்னடா பண்ணி வெச்சிருக்கிங்க: ரோஜா சீரியலை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
Roja Serial
Troll
Sun Tv
By Parthiban.A
திரைப்படங்களுக்கு இணையாக தற்போது சீரியல்களை வித்யாசமாக வர தொடங்கிவிட்டன. ஆனால் ஒரு சில சீரியல்களில் வித்யாசமாக யோசிக்கிறேன் என சொல்லி காட்சிகள் வைத்து அதிக கலாய் வாங்குவதும் அவ்வப்போது நடப்பது தான் .
இந்நிலையில் தற்போது ரோஜா சீரியலில் நடுரோட்டில் முகமாற்று அறுவை சிகிச்சை நடப்பது போல காட்டி இருப்பது மீம் மெட்டீரியலாக மாறி இருக்கிறது. 'என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க' என நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளி வருகின்றனர்.
ரோஜா இறந்துவிட்டது போல வில்லியை நம்ப வைக்க வேண்டும் என்பதற்காக அர்ஜுன் போட்ட பிளான் தான் இது. வேறு ஒரு உடலில் ரோஜாவை போல முகமூடி வைத்து விடுகின்றனர். அடுத்த நொடியே அது நிஜ ரோஜா போல மாறிவிடுகிறது.
Humans ஆடா நீங்க???? @DrSharmila15 மேடம் ??? pic.twitter.com/dYED0iWLcV
— விஜய் (@adi10vj) January 7, 2022