லாஜிக் எங்கடா? RRR ட்ரைலரை விமர்சித்த பிரபலம்! நெட்டிசன்கள் ரியாக்ஷன் இதுதான்
ராஜமௌலி பாகுபலி படத்திற்கு பிறகு அடுத்து இயக்கி இருக்கும் ஆர்ஆர்ஆர் படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி இணையத்தில் படுவைரல் ஆகி கொண்டிருக்கிறது. பிரம்மாண்ட காட்சிகள், சிலிர்க்க வைக்கும் சண்டை என படம் இருக்கிறது என பலரும் ராஜமௌலியை பாராட்டி வருகின்றனர்.
ஆனால் மறுபுறம் சண்டை காட்சிகளில் லாஜிக் இல்லையே என சிலர் விமர்சிக்க தொடங்கி இருக்கின்றனர். வேகமாக வரும் பைக்கை காலில் உதைத்து பறக்கவிட்டு கையால் பிடிக்கும் ஸ்டண்ட், நீருக்கடியில் ஓடுவது என பல காட்சிகள் லாஜிக் இல்லையே என சிலர் குறிப்பிட்டு விமர்சித்து வருகின்றனர்.
யூடியூப் பிரபலம் மதன் கௌரி தான் அப்படி ட்விட் போட்டிருக்கிறார். லாஜிக் பார்த்தால் இந்தியாவில் 90 சதவீத சினிமாவை பார்க்கவே முடியாதே என நெட்டிசன்கள் அவருக்கு கமெண்டில் கூறி வருகின்றனர்.
Logic patha India le 90% cinemas pakka mudiyadhu. pic.twitter.com/E2OE3WqvIr
— ESCOBAR (@El_PATRON_NARCO) December 9, 2021
இதையே பாலிவுட்டில் செய்தால் கலாய்க்குறீங்க, தெலுங்கில் பண்ணா மாஸ்னு சொல்றீங்கனு சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Bollywood kare toh Logic
— (SRK FaN) (@SRKFANJUNAEID) December 9, 2021
South Kare toh Massss #RRRTrailer pic.twitter.com/b90gEl3IvK