விஜய்யை மறைத்து அப்பா எஸ்ஏசி செய்த காரியம்! கடும் கோபத்தில் விஜய் ரசிகர்கள்
தற்போது கோலிவுட்டில் டாப் ஹீரோவாக வலம் வருகிறார் தளபதி விஜய். அவர் தன் படங்களுக்கு தற்போது 100 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கி வருகிறார்.
சமீப காலமாக விஜய் மற்றும் அவரது அப்பா எஸ்ஏசி இடையே மோதல் இருந்து வருகிறது. விஜய் பெயரில் அவர் அரசியல் கட்சி பதிவு செய்ததால் விஜய் கோபப்பட்டு அவர் மீது வழக்கு கூட தொடுத்தார். அதற்கு பிறகு தான் எஸ்ஏசி அந்த கட்சியை கலைத்தார்.
இந்த பிரச்சனைக்கு பிறகு அவர்கள் பேசிக்கொள்வதே இல்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது எஸ்ஏசி செய்த காரியம் விஜய் ரசிகர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இயக்குனர் ஷங்கர் அவர் வீட்டுக்கு சென்று சந்தித்து இருக்கிறார். எப்போது இருவரும் சேர்ந்து நின்று போட்டோ எடுத்து இருக்கின்றனர். பின்னால் இருக்கும் போட்டோவில் விஜய்யை மறைத்துகொண்டு தான் ஷங்கர் நிற்கிறார்.
விஜய் முகத்தை மறைத்து இப்படி ஒரு போட்டோ எடுத்து "மகிழ்ச்சி" என குறிப்பிட்டு பதிவிட்டு இருப்பதால் எஸ்ஏசி மீது விஜய் ரசிகர்கள் கோபத்தில் இருக்கின்றனர்.