வெறிப்பிடித்த நாய் மாதிரி அடிச்சாங்க!! சரிகமப போட்டியாளர் பிரகாஷுக்கு நடந்த கோர சம்பவம்!!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சி சரிகமப. தற்போது ஜூனியர் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகப்பெரியலவில் பிரபலமாகி வருகிறது. அதிலும் பாடல்களை பாடும் குட்டிகுழந்தைகள் நடுவர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தி வருகிறார்கள்.
சரிகமப நிகழ்ச்சியின் போட்டியாளர் ஒருவர் மீது தாக்குதல் நடந்திருப்பது தான் தற்போது வைரலாகி வருகிறது. இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் பாடகர் பிரகாஷ்.
26 வயதான பிரகாஷ் விவசாய குடும்பத்தை சார்ந்தவர் 8 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது அவரது அப்பாவின் மீது மாற்று சமூகத்தினர் கல் எறிந்ததில் அவர் இறந்திருக்கிறார்.
பின் பிரகாஷின் கால், கை செயலிழந்துவிட்டது. பின் தன் கிராமத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் ஆர்கெஸ்ட்ரா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பின் சரிகமப நிகழ்ச்சியில் தன் திறமையை நிரூபிக்க வந்தார்.
2019ல் நடந்த நிகழ்ச்சியில் யுவன் சங்கர் ராஜா மேடைக்கு வந்து கட்டியணைத்து அவரது பாடலை பாராட்டினார்.
இந்நிலையில் பிரகாஷ் தீபாவளியை குடும்பத்தினருடன் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது மாற்று சமயம் மற்றும் சமூகத்தினர் பிரகாஷை வழிமறித்து பீர் பாட்டிலால் தலையில் 15 முறை கொடூரமாக தாக்கியுள்ளனர்.
உயிருக்கு போராடிய பிரகாஷை காப்பாற்றி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் குறித்த யூடியூப் சேனலுக்கு பேட்டிக்கொடுத்து வறுத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.