விஜய்க்காக இப்படியொரு சதி செய்த எஸ் ஏ சந்திரசேகர்!! எல்லாத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்த தளபதி 68
நடிகர் விஜய் லியோ படத்திற்கு பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் தன்னுடைய 68வது படத்தில் விரைவில் நடிக்கவிருக்கிறார். இதற்கான முழு அப்டேட் நாளை பிற்பகல் 12.05 மணிக்கு வெளியாகும் என்று ஏஜிஎஸ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பதி தகவலை கூறியிருக்கிறார்.
தற்போது தளபதி 68ல் நடிகர் மாதவன் நடிப்பதால் படம் மிகப்பெரியளவிலும் வேற லெவலிலும் இருக்கும் என்றும் வெங்கட்பிரபுவிற்கு இது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று சினிமா விமர்சகர் செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார். அதாவது, எஸ் ஏ சந்திரசேகர் தன் மகனுக்காக எடுத்த சில முயற்சிகளை கூறி அதிரவைத்திருக்கிறார்.
லிங்குசாமி இயக்கத்தில் ஆர்யா, மாதவன் நடிப்பில் வேட்டை படம் 2012ல் வெளியானது. இப்படத்தில் ஆர்யாவின் ரோலுக்கு நடிகர் விஜய் தான் நடிக்க பேச்சுவார்த்தை நடந்ததாம். ஆனால் விஜய் வேலாயுதம் படத்தில் பிஸியாக நடித்ததால் அப்படத்தில் நடிக்க முடியாமல் போனதால் டேட் விசயத்தில் சரியான தேதியை ஒதுக்கமுடியாமல் போயுள்ளது.
தற்போது, மாதவன் நடிகர் விஜய்யின் 68 படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். ஆனால் ஒரு காலக்கட்டத்தில் விஜய்க்கு போட்டியாக நடிகர் மாதவன் இருந்ததாகவும் அவரை வீழ்த்த எஸ் ஏ சந்திரசேகர் சதி செய்யதாராம். விஜய்க்கு போட்டியாக வளர்ந்து வரும் நடிகர்களை ஆரம்பத்திலேயே அவர்களது கேரியரை காலி செய்திருக்கிறாராம்.
அப்படி நரேனின் நெஞ்சிருக்கும் வரை, ரவி கிருஷ்ணாவின் சுக்கிரன், ஜெய்யின் கேப்மாரி போன்ற படத்தை இயக்கியதாக கூறியுள்ளார் செய்யாறு பாலு. மேலும் மாதவனும் ஆரம்பத்தில் மிகப்பெரிய வெற்றியை தந்ததால் அவருக்கே எஸ் ஏ சந்திரசேகர் கதையை கூறியிருக்கிறார்.
ஆனால் அதில் விருப்பம் இல்லாத மாதவன், விஜய் அப்பா என்ற காரணத்தால் ஒரு கதையில் நடிக்க வேண்டா வெறுப்பாக நடிக்க ஓகே சொல்லியிருக்கிறார். ஆனால், அவரது மேலாளர் கதையை கேட்டு அந்த கதை உங்களை அப்படியே அழிக்கும் என்றும் எஸ் ஏ சி-யின் சதியை பற்றியும் விளக்கியுள்ளார்.
இதனை பலர் சமீபகாலமாக செய்யாறு பாலு, ரஜினிக்கு சப்போர்ட் செய்தும் விஜய்யை தாக்கி பேசியும் வருகிறார். இப்படி மற்றவர்களை காலி செய்து ஃபீல்ட் அவுட் ஆன நடிகர்கைன் கேரியருக்கு தடையாக இருப்பவர்கள் விஜய், எஸ் ஏ சி என்று உருட்டுவார்கள் என்று கிண்டலடித்து கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
அதிலும் மாதவன் தளபதி68ல் நடிக்கிறாரா என்ற தகவல் இன்னும் உறுதியே ஆகவில்லை அதற்குள் இப்படியொரு செய்தியை உருட்டுகிறார் என்று விஜய் ரசிகர்கள் திட்டியும் வருகிறார்கள். ஆனால் அவருக்கு பதில் நடிகர் பிரசாந்த் நடிக்கவுள்ளார்.
இதுவரை பிரசாந்துடன் சேராதா விஜய், அவரது 68 படத்திற்கு நடிக்க வைக்க திட்டமிட்டு அதிகார அறிவிப்பையும் அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.