மகன் லண்டன் இயக்குனர்!! விஜய் மகள் திவ்யா நடிகையா வருவாரா!! அந்த விசயத்தில் சங்கீதா இப்படி!! SAC ஓப்பன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். வாரிசு படத்திற்கு பிறகு குடும்பத்துடன் நேரத்தினை செலவிட்டு அவரது அடுத்த படமான 67 படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
SAC ஓப்பன்
சமீபத்தில் விஜய்க்கும் அவரது அப்பா எஸ் ஏ சி-க்கும் இடையில் மன கசப்பு பிரச்சனை இருந்து வருவதாகவும் இதற்கு காரணம் சங்கீதா என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் விஜய்யின் தந்தை சங்கீதா எப்படிப்பட்டவர் என்றும் விஜய்யின் குழந்தைகளை பற்றியும் நடிகை வனிதா எடுத்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
விஜய்யை நான் ஒரு குழந்தையாகவே நினைத்து கொண்டது தப்பா என்று எனக்கு தெரியவில்லை. எனக்கு இரு பிள்ளைகளை கொடுத்து அது ஒரு பிள்ளை தான் உனக்கு என்று விஜய்யை, கடவுள் கொடுத்திருக்கிறார் என்று கூறியுள்ளார். மேலும், விஜய்யை நான் என்றும் விட்டுக்கொடுத்ததில்லை, எந்த இடத்திலும் அதை செய்யவில்லை என தெரிவித்தார்.
விஜய் மகள் திவ்யா
பேரன் சஞ்சய் இயக்குனராக வெளிநாட்டிலும், பேத்தி திவ்யா சென்னையில் 12 ஆம் வகுப்பும் படிக்கிறாள் என்று கூறியுள்ளார். மேலும் மகள் திவ்யா சினிமாவிற்கு வருவாரா என்று வனிதா கேட்க, அந்த விசயத்தில் அது என்னுடைய மருமகள் சங்கீதா கைக்குள் தான்.
அவங்களோட ஒவ்வொரு அசைவும் சங்கீதா கவனித்து கொள்கிறார். நான் எதாவது குழந்தைகளுக்கு கொடுத்தால் கூட, இருவரும் அம்மாவை பார்ப்பாங்க என்று வெளிப்படையாக கூறியுள்ளார் எஸ் ஏ சி. பேத்தி சினிமாவில் வருவது சங்கீதா கையில் தான் இருக்கிறது. பேரன் ஏற்கனவே இயக்குனராகிவிட்டான் என்று கூறியுள்ளார்.