என்னடா அநியாயம் இது..! சச்சினை கொந்தளிக்க வைத்த வீடியோ
கிரிக்கெட்டின் கடவுள் என சக கிரிக்கெட் வீரர்களே புகழும் அளவுக்கு கிரிக்கெட் விளையாட்டில் தலை சிறந்து விளங்கியவர் சச்சின் டெண்டுல்கர். தற்போது சச்சின் ட்விட்டரில் ஒரு வீடியோ பதிவிட்டு கொந்தளிப்புடன் பேசி இருக்கிறார்.
ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்டில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் செய்த போது பந்து ஸ்டம்ப் மீது வேகமாக தாக்கியும் பெயில்ஸ் விழாமல் இருந்தது. எஸ்பிடபுள்யூ அவுட் கொடுக்கப்பட்டு இருந்த நிலையில் பெண் ஸ்டோக்ஸ் ரிவியூ செய்தார். அதில் பந்து அவரது காலில் படாதது உறுதி ஆனது.
அதனால் அவருக்கு நாட் அவுட் கொடுக்கப்பட்டது. இது பவுலருக்கு அநீதி என சச்சின் தெரிவித்து உள்ளார். "Hitting the stumps" என புது விதி கொண்டு வர வேண்டும் என அவர் கேட்டிருக்கிறார். சச்சின் பகிர்ந்த அந்த வீடியோவை 1.4 மில்லியன் பேர் பார்த்திருக்கிறார்கள்.
சச்சினுக்கு பதில் அளித்து இருக்கும் ஷேன் வார்ன் 'இது விவாதத்துக்கு உரியது. உலக கிரிக்கெட் கமிட்டியின் விவாதத்திற்கு இதை கொண்டு செல்வேன்" என தெரிவித்து இருக்கிறார்.
Interesting point & one to debate my friend. I will take this to the world cricket committee for discussion & come back to you. Never seen anything like that today - Greene’s delivery was 142kph and hit the stump hard !!!!! ?? https://t.co/GO6IeHgtsk
— Shane Warne (@ShaneWarne) January 7, 2022