17 வயது நடிகையிடம் கேட்கப்பட்ட மிக மோசமான கேள்வி, காப்பற்றிய சாய்பல்லவி

sai pallavi keerthy shetty
By Tony Dec 26, 2021 06:27 AM GMT
Report

தெலுங்கு சினிமாவில் எப்போதும் மீடியாக்கள் கொஞ்சம் ஓவராகவே இறங்கி கேள்வி கேட்பார்கள். அந்த விதத்தில் சமீபத்தில் ஷாய்ம் சிங்கர் ராய் படத்தின் ப்ரஸ் மீட் நடந்தது.

இதில் அந்த படத்தில் நடித்த கீர்த்தி ஷெட்டியிடம் உங்கள் முந்தைய படத்தில் மிக மோசமாக ஒரு பாடல் காட்சியில் நடித்தீர்கள்.

இதிலும் அப்படிப்பட்ட காட்சிகள் உள்ளதா என்று கேட்க, அவருக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தார்.

அவருக்கு 18 வயது கூட ஆகவில்லை, இதனால், இந்த கேள்வியை அவர் தர்மசங்கடமாகவே எதிர்கொண்டார்.

உடனே நிலைமையை புரிந்துக்கொண்ட சாய் பல்லவி உடனே அவரே பேசி, இந்த படத்தில் அப்படி ஏதுமில்லை என்று பேசி கடந்து சென்றுவிட, கீர்த்தி ஷெட்டி பெருமூச்சு விட்டார்.