அது விதின்னு அமிதாப் பச்சனுக்கு பதிலளித்த சாய் பல்லவி!! கலாய்த்த ரன்பீர்..
இயக்குநர் நிதிஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி வரும் அக்டோபர் 6 ஆம்தேதி ரிலீஸாகவுள்ளது ராமாயணா படம்.

இப்படத்தின் பிரமோஷனுக்காக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, அமிதாப் பச்சனின் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அப்போது அமிதாப் பச்சன், சாய் பல்லவியிடம், நீங்கள் மருத்துவ படிப்பை விட்டுவிட்டு எப்படி சினிமாவுக்கு வந்தீர்கள் என்று கேட்டுள்ளார்.

அதற்கு சாய் பல்லவி, அது கடவுளால் எழுதப்பட்ட விதி என்று தான் நம்புகிறேன். கடவுள் அப்படித்தான் எழுதி இருந்தார், நான் நடிக்க வேண்டும் என்பதுதான் என் விதியில் இருந்தது என்று கூறியிருக்கிறார்.
உடனே ரன்பீர் கபூர், சார் அது உண்மைதான், அது கடவுளின் மருந்து சீட்டு போல, அவங்க கண்டிப்பா நடிச்சாகணும்னு ஆண்டவன் எழுதிவிட்டார் என்று கலாய்த்துள்ளார்.