விவாகரத்துக்கு பின் ரிலேஷன்ஷிப் தொடரும்!! ஜிவி பிரகாஷ் பற்றி பேசிய சைந்தவி..
சைந்தவி ஜிவி பிரகாஷ் விவாகரத்து
தென்னிந்திய சினிமாவில் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் ஜிவி பிரகாஷ் குமார், 2013ல் பின்னணி பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி சில ஆண்டுகளுக்கு பின் குழந்தை பிறந்த நிலையில் கடந்த ஆண்டு 2024ல் 9 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக கூறி விவாகரத்து செய்தியை இருவரும் அறிவித்தனர்.
ரிலேஷன்ஷிப்
இதனை தொடர்ந்து ஜிவி பிரகாஷின் கான்செட் நிகழ்ச்சிகளில் சைந்தவி பாடல் பாடி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார். சமீபத்தில் அளித்த பேட்டியில் பாடகி சைந்தவி, ஜிவி பிரகாஷ் இசையில் நான் ஏராளமான பாடல்களை பாடி இருக்கிறேன். அவர் இப்போது எனக்கு ஒரு நல்ல நண்பராக இருக்கிறார்.
நாங்கள் இரண்டு பேரும் இணைந்து ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறோம். நாங்கள் தனிப்பட்ட விதத்தில் பிரிந்தாலும் இசை ரீதியாக எங்களது ரிலேஷன்ஷிப் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும் என்று சைந்தவி தெரிவித்துள்ளார்.