சர்க்கரை தூக்கலாய் ஒரு.. இப்படியும் ஒரு படத்தின் பெயரா
Sakkarai thookalaai oru punnagai
By Parthiban.A
தமிழ் சினிமாவில் வருடத்திற்கு நூற்றுக்கணக்கில் படங்கள் திரைக்கு வருகின்றன. அதில் ஒரு சில படங்களில் பெயர்களை கேட்டாலே 'இப்படி ஒரு பெயரா' என ஷாக் ஆகும் வகையில் இருக்கும்.
சின்ன பட்ஜெட்டில் உருவாகி தலைப்பிற்காகவே ரசிகர்களின் கவனம் ஈர்த்த படங்களும் பல உண்டு. இந்நிலையில் தற்போது "சர்க்கரை தூக்கலாய் ஒரு புன்னகை" என்று ஒரு படத்திற்கு பெயர் வைத்திருக்கிறார்கள். இப்படி ஒரு டைட்டிலா என பலரையும் பேச வைத்திருக்கிறது அது.
ருத்ரா என்ற புதுமுகம் ஹீரோவாகவும், சுபிக்ஷனா ஹீரோயினாகவும் நடித்து இருக்கும் இந்த படத்திற்கு சில திரைப்பட விழாக்களிலும் விருதுகள் கிடைத்திருக்கிறதாம்.
எல்லோரது கவனம் ஈர்க்க வேண்டும் என்றே இப்படி ஒரு டைட்டில் வைத்திருப்பதாக குழுவினர் தெரிவித்து உள்ளனர்.