எனக்கு குழந்தை வேண்டும், ஆனால்! உருக்கமாக பேசிய சல்மான், கிண்டல் செய்யும் ரசிகர்கள்

Bollywood Salman Khan
By Tony May 03, 2023 04:33 AM GMT
Report

சல்மான் கான் பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர். இவர் நடிப்பில் படம் எப்படி இருக்கிறதோ இல்லையோ, ஆனால், வசூல் மட்டும் ரூ 100 கோடிகளை தாண்டி விடும்.

இந்நிலையில் சல்மான் கான் சமீபத்தில் திருமணம் குறித்தும் தன் முன்னாள் காதலிகள் குறித்தும் உருக்கமாக பேசியுள்ளார்.

இதில், என் காதல் முதன் முறையாக ப்ரேக் அப் ஆன போது, அந்த பெண் மீது கோபப்பட்டேன்.

ஆனால், தற்போது தான் புரிகிறது, தவறு என் மீது தான் உள்ளது என்று, அதோடு எனக்கு குழந்தை வேண்டும் என்ற ஆசை உள்ளது.

அதே நேரத்தில் திருமணம் ஆகாமல், குழந்தை பெற்றுக்கொள்வதை நம் சட்டமும் ஏற்காதே, என வருத்தமாக பேசியுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் பலரும், சார் இதெல்லாம் உங்ககளுக்கே ஓவராக இல்லையா, என கலாய்த்து வருகின்றனர்.