13 வருட சினிமா வாழ்க்கையில் அஜித் நோ!! விஜய்-னா ஓகே!! ரஜினி, கமலை ஒதுக்கி வரும் நடிகை சமந்தா..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித், துணிவு படத்தினை தொடர்ந்து இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் நடிகை திரிஷா பல ஆண்டுகள் கழித்து அவருடன் ஜோடியாக நடிக்கவுள்ளார்.
அப்படி அவருடன் நடிக்க பல நடிகைகள் போட்டிப்போடும் நிலையில், டாப் இடத்தில் இருக்கும் ஒருசில நடிகைகள் அஜித்துடன் இதுவரை ஜோடி போடாமல் இருந்து வருகிறார்கள். அதில் முக்கியமானவர் நடிகை சமந்தா.
சினிமாவில் அறிமுகமாகி 13 ஆண்டுகளில் இதுவரை சமந்தா விஜய்யுடன் கத்தி, தெறி, மெர்சல் போன்ற படங்களில் ஜோடிப்போட்டிருந்தார். ஆனால் அஜித்துடன் ஜோடியாக நடிக்க வாய்ப்பும் கிடைக்கவில்லை.
மேலும் ரஜினி, கமல் போன்ற முன்னணி மூத்த நடிகர்கள் படத்தில் கூட நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் ஒதுக்கி வருகிறார் நடிகை சமந்தா. அதேபோல் நடிகை கீர்த்தி சுரேஷ், விஜய்யுடன் சர்கார், பைரவா படங்களில் நடித்தார்.
ஆனால் அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு கூட அவருக்கு கிடைக்கவில்லை.
இவர்களை போல் நடிகை அமலா பால், ஸ்ரேயா சரண், ஆண்ட்ரியா போன்ற நடிகைகள் அஜித்துடன் இன்று வரை நடிக்காமல் இருந்து வருகிறார்கள்.