மயோசிடிஸ் சிகிச்சைக்கு பின் மீண்டும் மருத்துவமனையில் சமந்தா.. இதுதான் முக்கிய காரணம்...
Samantha
Tamil Actress
Actress
By Edward
புஷ்பா படத்தில் கவர்ச்சி ஆட்டம் போட்டப்பின் மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா, அந்த கஷ்டத்திற்கு மத்தியிலும் சகுந்தலம், குஷி உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.
ஏற்கனவே ஆசையாய் காதலித்த நாக சைதன்யாவை திருமணம் செய்து 4 ஆண்டுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார்.
அதன்பின் மனதாலும் உடலாலும் பல கஷ்டபங்களை சந்தித்தும் வந்தார். தற்போது மயோசிடிஸ் நோயிற்கு சிகிச்சை பெற்று கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார்.
ஆனால் மீண்டும் சில உடல் பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன் என்று சமந்தாவே இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
அதாவது வெள்ளை அணுக்கள் உற்பத்தியை அதிகரித்து உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த சிகிச்சை மேற்கொண்டுள்ளதாக அந்த பதிவில் கூறியிருக்கிறார் நடிகை சமந்தா.


