பொறாமையா? முன்னாள் கணவரின் 2 - ம் திருமணம் குறித்து சமந்தா பதிலடி
சமந்தா
நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததால் சிகிச்சை பெறுவதற்காக சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்தார். தற்போது, மீண்டும் வெப் தொடர்களில் நடித்து வருகிறார்.
இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டு பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தது அனைவரும் அறிந்த ஒன்றே.
கடந்த வருடம் நாக சைதன்யா தனது புது காதலி சோபிதாவை திருமணம் செய்துகொண்ட நிலையில், மறுபுறம் சமந்தா சிங்கிளாக வலம் வருகிறார்.
சமந்தா பதிலடி
இந்நிலையில், நாக சைதன்யா 2 - வது திருமணம் செய்து கொண்டது பொறாமையாக உள்ளதா என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் சமந்தாவிடம் கேள்வி எழுந்துள்ளது.
அதற்கு,"அய்யய்யோ இல்லை, நான் எப்போதும் விலகி இருக்கும் ஒரு விஷயம் என்றால் அது பொறாமை தான். என்னிடம் அது இருப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
பொறாமை தான் எல்லா மோசமான விஷயங்களுக்கும் வேர். மற்ற எல்லாம் பரவாயில்லை, ஆனால் பொறாமை என்பதற்கு மட்டும் என்னிடம் இடமில்லை" என சமந்தா கூறியுள்ளார்.