அரியவகை நோயால் நடக்கவே முடியாத நிலை!! கஷ்டப்பட்டு போகும் நடிகை சமந்தாவின் வைரல் வீடியோ
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. கடந்த 2021 ஆம் ஆண்டு பல சர்ச்சைகளில் சிக்கியப்பின் காதலித்து திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யாவை விவாகரத்து செய்து கொண்டார்.
விவாகரத்துக்கு பின் கடினமாக நடிப்பில் கவனம் செலுத்தி பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தி யசோதா படம் வெளியாகும் முன் 3 மாதங்களாக மயோசிடிஸ் என்ற அரியவகை நோயாய் பாதிப்பு அடைந்ததாகவும் அதிலிருந்து மீண்டு வர கஷ்டப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இதற்காக கடினமான சிகிச்சைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் எழுந்து கூட நடிக்க முடியாமல் படுத்த படிக்கையில் இருக்கும் சமந்தா வெளிநாட்டில் சிகிச்சைக்காக செல்லவுள்ளார் என்ற தகவலும் வெளியானது.
தற்போது சகுந்தலம் படத்தில் நடித்துள்ள சமந்தா அப்படத்தின் டப்பிங் வேலையை முடித்த தகவலை வெளியிட்டார். இந்நிலையில் நடிகை சமந்தா மும்பை விமான நிலைத்திற்கு சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. சோகத்தின் உச்சிக்கே சென்று படுஒல்லியாக மாறி நடக்கமுடியாமல் நடந்து செல்வதை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.
#Samantha Spotted at Mumbai Airport pic.twitter.com/P58paQOwFh
— Filmy Kollywud (@FilmyKollywud) January 6, 2023