விவாகரத்துக்கு பின் அரியவகை நோயால் பாதிப்பு.. நான் இன்னும் சாகவில்லை என்று கூறி அழுத நடிகை சமந்தா..

Samantha
By Edward Nov 08, 2022 12:11 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறு ரோலில் நடித்து நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை சமந்தா. அந்த படத்தில் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் நாக சைதன்யாவுடன் ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமாகினார்.

விவாகரத்துக்கு பின் அரியவகை நோயால் பாதிப்பு.. நான் இன்னும் சாகவில்லை என்று கூறி அழுத நடிகை சமந்தா.. | Samantha Clarified About Health Issues

அரியவகை நோய்

இதனையடுத்து தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக ஜொலித்து வருகிறார். காதலித்து திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யாவை கடந்த ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார் சமந்தா.

அதன்பின் கிளாமரில் குத்தாட்டம், போட்டோஷூட் என்று ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார். சமீபத்தில் அவருக்கு myositis என்ற அரியவகை நோய் இருப்பதாக புகைப்படத்துடன் மருத்துவமனை புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்தார்.

நான் இன்னும் சாகவில்லை

இந்த விசயம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சமந்தாவுக்கு ஆபத்தான நோய் என்றெல்லாம் இணையத்தில் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் சமந்தா யசோதா படத்தின் பிரமோஷனுக்காக பேட்டிக்கொடுத்திருக்கிறார்.

அதில் myositis நோய் பற்றியும் உடல் நிலை பற்றியும் பகிர்ந்துள்ளார். எனது உடல்நிலை குறித்து இணையத்தில் பல செய்திகள் வெளியாகி வருகிறது. எனக்கு Live threatening இருக்கிறது என்றெல்லாம் கூறிகிறார்கள்.

நான் சாகவில்லை, நான் எப்போது சாகமாட்டேன், எனக்கு கடினமான நிலை இருந்தால் நான் போராடி மீண்டு வருவேன் என்று கண்ணீர் விட்டப்படி உருக்கமாக பேசியிருக்கிறார்.

விவாகரத்துக்கு பின் அரியவகை நோயால் பாதிப்பு.. நான் இன்னும் சாகவில்லை என்று கூறி அழுத நடிகை சமந்தா.. | Samantha Clarified About Health Issues