அந்த இடத்தில் அப்படியொரு டேட்டூ!! விவாகரத்துக்கு பின் அழிக்காத நடிகை சமந்தா..
தமிழ், தெலுங்கு மொழிகளில் நடிகையாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் நடிகை சமந்தா. முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த சமந்தா, நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து 4 ஆண்டுகளில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.
[Q9J3CM ]
படங்களில் பிஸியாக நடித்து வந்த சமந்தா, மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு வந்தார். கஷ்டப்பட்டு வந்த சமந்தா வெளிநாட்டு சிகிச்சை என்று தீவிர சிகிச்சை மேற்கொண்டு உடற்பயிற்சி செய்து மீண்டு திரும்ப ஆயத்தமானார்.
படிப்படியாக அதிலிருந்து மீண்டு வருகிறேன் என்று சமீபத்திய பேட்டிகளில் கூறி வந்தார். தற்போது சாகுந்தலம் படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றதோடு பல கோடி நஷ்டத்தை சந்தித்து வருகிறது.
சமீபத்தில், பிரியங்கா சோப்ரா நடித்த சிட்டாடல் படத்தின் பிரீமியர் நிகழ்ச்சிக்கு கிளாமர் லுக்கில் சென்றிருந்தார் சமந்தா. அங்கு எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்ட நிலையில், சமந்தாவின் டேட்டூவும் பளிச்சென்று தெரிந்துள்ளது.
விவாகரத்துக்கு முன் காதலித்து வந்த கணவரின் நினைவாக ஒரு டேட்டூவை இடுப்பு பகுதியில் போட்டிருந்தார் சமந்தா. ஆனால் அந்த டேட்டூவை இன்று வரையில் அழிக்காமல் இருப்பதால் ரசிகர்கள் கணவரை மறக்கவில்லை என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.