அந்த காதலை மட்டும் இழக்கவில்லை!! அரியவகை நோய்க்கு பின் மேடையில் அழுத நடிகை சமந்தா..
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. கடந்த 2021 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்த சமந்தா படங்களில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.

இதற்கிடையில் சில மாதங்களுக்கு முன் மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டு வருகிறேன் என்றும் எழுந்து கூட நடிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் பேட்டிகளில் கூறியிருந்தார்.
அப்படியொரு கஷ்டத்தில் இருக்கும் போது கூட யசோதாம், குஷி, சகுந்தலம் போன்ற படங்களின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு நடித்து வந்தார். நேற்று சமந்தா உடல் எடையில் சற்று மாற்றமும் சோர்வான முகம் நடக்க கூட முடியாமல் விமான நிலையத்தில் இருந்து வந்த வீடியோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்தது.

இந்நிலையில், சமந்தா, தேவ் மோகன் நடிப்பில் வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாகவுள்ள சகுந்தலம் படத்தில் டிரைலர் லான்ச் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் சமந்தா. சமந்தாவை பற்றி பலர் பேசியபோது கண்ணீருவிட்டு அழுதுள்ளார் சமந்தா.
பின் சமந்தா மேடையில் பேச, இத்தருணத்திற்காகத்தான் காத்திருந்தேன். எதிர்ப்பார்த்தபடி ரிலீசாக வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பம். சில சமங்களில் ஒருசில மாயம் நடக்கும், அப்படித்தான் சகுந்தலம் படத்திற்கும் நடந்துள்ளது. எத்தனை கஷ்டங்களை சந்தித்தாலும் சினிமா மீதான காதலை நான் இழக்கவில்லை என்று உருக்கமாக பேசியுள்ளார் நடிகை சமந்தா.
Dear @Samanthaprabhu2 ♥️ Many Heroines In Indian Film Industry May Come & Go, But You Are Always One For Me ?❤️ I Love You Forever & Ever ? @Samanthaprabhu2 Forever ? #SamanthaRuthPrabhu #Samantha #Shakunthalam #Samanthaforever pic.twitter.com/tFAIxwcDI4
— FILMY AJJU (@AjaybOss1438) January 9, 2023