அரியவகை நோயால் உடலில் முக்கிய விஷயத்தை இழந்துவிட்டாரா சமந்தா.. பெரும் சோகம்

Samantha
By Kathick Jan 10, 2023 10:32 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் சமந்தா. இவர் சில மாதங்களுக்கு முன் மயோசிட்டிஸ் எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டார்.

மேலும் தற்போது அதற்கான சிகிச்சையில் இருந்து வரும் சமந்தா நேற்று தன்னுடைய சகுந்தலம் படத்தின் ப்ரோமோஷில் கலந்துகொண்டார். சமந்தா பார்த்தவுடன் அவருடைய ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியடைந்தனர். ப்ரோமோஷன் விழாவில் சற்று மனமுடைந்த கண்ணீர்விட்டு அழுதார் சமந்தா.

அந்த வீடியோ கூட ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இந்த விழாவில் சமந்தாவை பார்த்து பலரும் மகிழ்ச்சியடைந்தாலும், சிலர் சமந்தாவின் மீது சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்கள்.

அதில் ஒரு ட்விட்டர் பக்கத்தில் இருந்து, 'நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, நோய்க்குபின் தன்னுடைய அழகையும், வசீகரத்தையும் இழந்துவிட்டார்’ என்று பதிவு செய்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

இதை கவனித்த நடிகை சமந்தா அந்த பதிவிற்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். சமந்தா பதிவில் 'நான் மேற்கொண்டதை போல் பல மாதங்கள் சிகிச்சைக்கு நீங்கள் செல்ல வேண்டாம் என்று நான் பிராத்தனை செய்து கொள்கிறேன். மேலும் என்னுடைய அன்பை உங்களுடைய வசீரத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள்' என பதிவு செய்துள்ளார்.