நான் இப்படித்தான் இருப்பேன்! விமர்சனம் குறித்து ஓப்பனாக பேசிய சமந்தா...

samantha pushpa oosolriyamama ooandavamawa
By Jai Dec 23, 2021 05:24 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் தற்போது சர்ச்சைக்கும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருப்பவர் நடிகை சமந்தா. பேமிலி மேன் 2 படத்தின் சர்ச்சை காட்சிகளில் ஆரம்பித்து விவாகரத்து, புஷ்பா படத்தின் அந்த குத்தாட்டம் என மீடியாவையே அதிரவைத்தார்.

இதனால் பல விமர்சனத்தை சந்தித்து வருகிறார் சமந்தா. பாடலை கொண்டாடி வந்தாலும் சமந்தாவை பலர் கடுமையாக திட்டியும் வருகிறார்கள். இதுகுறித்து சமீபத்தில் சமுகவலைத்தளத்தில் அப்பாடலின் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அதில், நான் நல்ல கதாபாத்திரத்தில் நடித்தேன், சில மோசமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளேன், சீரியஸாகவும் நடித்துள்ளேன். ஒரு தொகுப்பாளராகவும் இருந்துள்ளேன். தான் செய்யும் எல்லா வேலைகளிலும் சிறந்து விளங்க நான் கடினமாக உழைத்து வருகிறேன்.

கவர்ச்சி என்பது கடினமான வேலை. அதையும் செய்து வருகிறேன். விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் மக்கள் பாடலை கொண்டாடி வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்கிறார் சமந்தா.