புதுப்பெண் பொலிவுடன் ஹோம்லி லுக்கில் சமந்தா!! நெக்லஸ் விலை மட்டும் இவ்வளவா...
சமந்தா
தென்னிந்திய சினிமாவின் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா, தற்போது பாலிவுட் சினிமாவில் கால்பதித்து பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இதற்கிடையில் மயோசிடிஸ் நோயின் தாக்கத்தால் கஷ்டப்பட்டு அதிலிருந்து மீண்டு வர பல சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி இயக்குநர் ராஜ் ரெடிமொருவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணமானது வெளிநாட்டுக்கு ஹனிமூன் சென்ற சமந்தா, அடுத்த கையோடு மா இன்டி பங்காரம் என்ற படத்தில் கமிட்டாகினார். அப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி ஸ்டண்ட் காட்களில் நடித்து மிரட்டியிருக்கிறார்.
நெக்லஸ் விலை
இந்நிலையில், அடக்கவுடக்கமான பெண்ணாக மாறியதோடு சேலையில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பகிர்ந்துள்ளார் சமந்தா. அதிலும் அவரது கழுத்தில் அணிந்திருந்த நெக்லஸ் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
முத்துக்கள் மற்றும் கற்களுடன் தங்க பூச்சு செய்யப்பட்ட வெள்ளியால் உருவாக்கப்பட்ட இந்த நெக்லஸின் விலை ரூ. 21218 என்று கூறப்படுகிறது.



