இந்த படம் மட்டும் ஹிட்டான சமந்தா எங்கேயோ போய்டுவாங்க.. டபுள் மடங்கு சம்பளத்தை உயர்த்த காத்திருக்கும் சமந்தா

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வரும் நடிகை சமந்தா தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவிருக்கின்ற நிலையில், வரும் செப்டம்பர் 18ஆம் தேதி, இப்படத்தில் இரண்டாவது பாடல் வெளியாகவிருக்கிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் வெற்றியை பொறுத்து தனது சம்பளத்தை இரண்டு மடங்கு உயர்த்த நடிகை சமந்தா திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், நடிகை சமந்தா மொத்தம் 5 இயக்குனர்களின் கதையை கேட்டு முடித்துள்ளாராம். ஆனால் இப்படங்களுக்கு சம்பளம் இதுவரை முடிவு செய்யவில்லையாம். காத்துவாக்குல 2 காதல் வசூலை பொறுத்தே, சமந்தா தனது அடுத்தடுத்த படங்களுக்கு சம்பளத்தை உயர்த்துவார் என்று கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. 


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்