நடிகைகளுக்கு இப்படித்தான் நடக்கும்.. என்னை கூட அப்படி!! நடிகை சமீரா ரெட்டி..
வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவின் காதலியாக நடித்து அனைத்து இளைஞர்களை தன் பக்கம் ஈர்த்து வந்தார் நடிகை சமீரா ரெட்டி. தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த நடிகை சமீரா ரெட்டி தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து இரு குழந்தைகளை பெற்றெடுத்தார். சினிமாவில் இருந்து விலகினாலும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார்.
சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், ஒரு படத்தின் சூட்டிங்ள இருந்தபோது ஒரு காட்சியில் முடித்துவிட்டு ஓய்வெடுத்து இருந்தேன். பின்னர் திடீரென இயக்குனர் என்னிடம் வந்து அடுத்த காட்சி லிப்லாக் காட்சி என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
என்னிடம் எந்த ஒரு முன்னறிவிப்பும் சொல்லவில்லை. இப்ப திடீரென லிப்லாக் காட்சி என்று சொல்கிறீர்களே என நான் பதறிப் போய் என்னால் நடிக்க முடியாது என்றேன். அதற்கு அவர் இதுக்கு முன்னாடி நீங்க நடித்த மூசபஃர் படத்தில் மட்டும் லிப் லாக் காட்சியில் நடித்தீர்கள்.
இதுல நடிக்க முடியாதா? முடிந்தால் நடியுங்கள். இல்லை என்றால் இந்த படத்தை விட்டு வெளியேறி போய்விடுங்கள் என மிரட்டினார்கள் என்றும் அந்த படத்தில் அந்த காட்சியில் நடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு நான் தள்ளப்பட்டேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.
மேலும் இப்படித்தான் தேவையான படுக்கையறை காட்சிகள், மிகவும் கிளாமரான உடைகளை அணிந்து நடிக்க வேண்டிய காட்சிகள், லிப்லாக் காட்சிகள் உள்ளிட்டவற்றில்அவர்களுக்கு தேவைப்பட்டால் நாம் நடிக்க வேண்டும் என மிரட்டி அந்த காட்சியை எடுத்து விடுவார்கள் என்று ஆதங்கத்துடன் தெரிவித்திருக்கிறார் நடிகை சமீரா ரெட்டி.